ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து சட்ட பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதற்கான மசோதாவை மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்தார்.
ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்துகள் அரசியல் அமைப்பு சட்டத்தின் 370 மற்றும் 35-ஏ பிரிவுகள் ரத்து செய்யப்பட்டதற்கான மசோதா நேற்று மாநிலங்களவையில் நிறைவேறியது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை, ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் சட்ட மசோதாக்களும் உடனடியாக சபையில் தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பாக விவாதம் நடைபெற்றது. அதிமுக, பிஜூ ஜனதா தளம், சிவசேனா, தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சிகள் மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்தன. பின்னர் குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது.
இந்தநிலையில், மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, காஷ்மீர் தொடர்பான மசோதாக்களை தாக்கல் செய்தார். 370வது பிரிவு நீக்கம், காஷ்மீரை இரண்டாக பிரிப்பதன் மூலம் அம்மாநில மக்களின் உரிமை நிலைநாட்டப்படும் என்று அவர் கூறினார்.