கரூரைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவன் நீட் தேர்வில் மாநிலத்தில் முதலிடமும், தேசிய அளவில் ஐந்தாம் இடத்தையும் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வில் 59 ஆயிரத்து 785 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இந்தநிலையில் மாற்றுத் திறனாளிகள் பிரிவில் கரூரைச் சேர்ந்த கார்வண்ணபிரபு மாநில அளவில் முதலிடத்தையும், அகில இந்திய அளவில் 5வது இடத்தையும் பெற்றுள்ளார். பன்னிரெண்டாம் வகுப்பில் 600க்கு 476 மதிப்பெண்கள் எடுத்த கார்வண்ணபிரபு, நீட் தேர்வில் அகில இந்திய அளவில் 720க்கு 572 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். நீட் தேர்வில் வெற்றிபெற சிபிஎஸ்சி பாடப் புத்தகத்தில் என்சிஆர்டி பாடங்களை படித்தால் நிச்சயம் நல்ல மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெறலாம் என்று மாணவர் கார் வண்ணபிரபு தெரிவித்தார்.
Discussion about this post