கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது – திருச்சி சிவா கோரிக்கை

திமுகவின் தலைவரான கருணாநிதி கடந்த செவ்வாய் கிழமை காலமாகியதையடுத்து புதன் கிழமை அடக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில், மாநிலங்களவை கூட்டுத்தொடரில் பேசிய திமுகவின் மாநிலங்களவை உறுப்பினரான திருச்சி சிவா, கருணாநிதி 80 ஆண்டுகால பொது வாழ்க்கையையும், 50 ஆண்டுகள் ஒரு கட்சி தலைவராக இருந்ததையும் சுட்டிக்காட்டி அவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என கோரிக்கை எழுப்பினார். இந்த கோரிக்கைக்கு திமுக உள்ளிட்ட காங்கிரஸ் எம்பிக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

Exit mobile version