கடலில் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் ஒப்புதல் வழங்கியதற்கு எதிராக அதிமுகவின் மூத்த தலைவரும் முன்னாள் மீன்வளத்துறை அமைச்சருமான ஜெயக்குமார் உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார். முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவாக வங்கக்கடலில் 81 கோடி ரூபாய் செலவில் பேனா வடிவ நினைவுச் சின்னம் அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்தது. இதற்கு அரசியல் கட்சிகள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் நிபந்தனைகளுடன் சுற்றுச்சூழல் அனுமதியை மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் வழங்கியது.
ஏற்கனவே பேனாச் சின்னம் அமைக்க தடை விதிக்க வேண்டும் மீனவர்கள் சார்பாக நீதிமன்றங்களில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சார்பாக உச்சநீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார். கடல் வளம் பாதிக்கப்படும் மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே இந்த திட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.