கார்த்திக் சிதம்பரத்திற்கு கட்டுப்பாட்டுடன் வெளிநாடு செல்ல அனுமதி -உச்சநீதிமன்றம்

பத்து கோடி ரூபாய் பிணையத் தொகையாக செலுத்திவிட்டு வெளிநாட்டுக்கு சென்று வர கார்த்தி சிதம்பரத்திற்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

ஏர்செல் மேக்சிஸ் வழக்கு மற்றும் ஐ.என்.எஸ் மீடியா முறைகேடு வழக்குகளில் சிக்கியுள்ள முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரம் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சர்வதேச டென்னிஸ் போட்டிக்காக பிரான்சு, ஜெர்மன் உள்ளிட்ட நாடுகளுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என கார்த்தி சிதம்பரம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த அமலாக்கத்துறை ஆறு மாதங்களில் 51 தடவை வெளிநாடு பயணம் செய்துள்ளதாக குறிப்பிட்டது. இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் எப்போது அழைத்தாலும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்ற கட்டுப்பாட்டுடன் வெளிநாடு செல்ல அனுமதி அளித்தார்.

Exit mobile version