மேகதாது அணை கட்டுவதற்கு அதிமுக கடும் எதிர்ப்பு -தடுக்குமா? திமுக??

காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்படும் மேகதாது அணை திட்ட பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று கர்நாடக துணை முதலமைச்சர் அஸ்வத் நாராயணா தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலம் ராம் நகர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற பிறகு துணை முதலமைச்சர் அஸ்வத் நாராயணா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் ஒப்புதல் கிடைத்தவுடன் மேகதாது திட்ட பணிகள் விரைவில் தொடங்கப்படும் என தெரிவித்தார். நீர்வளத் துறை அமைச்சராக ரமேஷ் ஜார்கிகோளி இருந்தபோது ராம்நகரில் உள்ள மேகதாது பகுதியில் இரண்டு முறை நேரடியாக வந்து ஆய்வு செய்தார் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்தத் திட்டத்தை செயல்படுத்தியே ஆக வேண்டும் என்பதில் முதலமைச்சர் எடியூரப்பா உறுதியாகவும் துணை முதலமைச்சர் அஸ்வத் நாராயணா தெரிவித்தார்.

இதனிடையே, மேகதாது அணை கட்டுவதை யாராலும் தடுக்க முடியாது எனக் கூறி கர்நாடக முதலமைச்சருக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற ஒரு தலைபட்சமான செயல் இரு மாநில உறவையும் பாதிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். இதில், தமிழ்நாடு முதலமைச்சர் கவனம் செலுத்தி, மேகதாது அணை கட்டுவதற்கான எந்தவொரு நடவடிக்கையையும் கர்நாடக அரசு எடுக்காத வகையில் சட்டப்பூர்வமான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.


மேற்கண்ட செய்தியின் கர்நாடக துணைமுதலமைச்சர் அஸ்வத் நாராயணா செய்தியாளர் சந்திப்பை காண…

⬇⬇⬇⬇⬇⬇⬇⬇⬇⬇⬇⬇⬇⬇

 

 

Exit mobile version