காவிரி – குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு எதிராக கர்நாடக அரசு, உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
புதுக்கோட்டை மக்களின் நீண்ட கால கனவு திட்டமான காவிரி குண்டாறு இணைப்புத் திட்டத்தை கடந்த பிப்ரவரி மாதம் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்த போது தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் மூலம் 6 ஆயிரத்து 971 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 118 கிலோ மீட்டர் தூரம் கால்வாய் வெட்டப்படுகிறது. காவிரி கொள்ளிடம் ஆறுகளில் உபரியாக கடலில் கலக்கும் 40 டி.எம்.சி நீரைப் பயன்படுத்தும் வகையில் செயல்படுத்தும் இந்த திட்டத்திற்கு எதிராக கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. மேகதாது அணைக்கு தமிழகம் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், கர்நாடக அரசு இந்த மனுவை தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.