காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிய அணை கட்ட அனுமதி கோரி, அணையின் வரைபடத்துடன் கர்நாடக அரசு மத்திய சுற்றுச்சுழல் அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளது.
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு தொடர்ந்து முயற்சித்து வருவதை கண்டித்து தமிழக அரசு தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்தநிலையில், புதிய அணைக்கான வரைபடத்துடன் கர்நாடக அரசு, அணை கட்ட சுற்றுச்சூழல் அனுமதி கோரி, மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது. கர்நாடக அரசு எழுதியுள்ள இந்த கடிதத்தில் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாயில் அணை கட்ட மதிப்பிடப்பட்டுள்ளதாகவும், இதனால் 5 கிராமங்கள் மூழ்கும் எனவும் தெரிவித்துள்ளது.
Discussion about this post