மேகேதாட்டு திட்ட அறிக்கையை மத்திய அரசிடம் கர்நாடகா வழங்கியது

மேகேதாட்டு அணை தொடர்பாக விரிவான திட்ட அறிக்கையை மத்திய அரசிடம் கர்நாடகம் சமர்பித்துள்ளது.

மேகேதாட்டுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு தமிழகம் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த விவகாரத்தில் இரு மாநிலங்களுக்கு இடையே சமரசம் ஏற்பட்ட பின்னரே அணை கட்ட அனுமதி தரப்படும் என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதேவேளையில் மேகேதாட்டுஅணை குறித்த திட்ட அறிக்கையை தாக்கல் செய்ய கர்நாடக அரசுக்கு அனுமதி வழங்கியது. இந்நிலையில் மேகேதாட்டு அணை குறித்த விரிவான திட்ட அறிக்கையை மத்திய நீர்வள ஆணையத்திடம் கர்நாடக அரசு தாக்கல் செய்துள்ளது.

Exit mobile version