வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் கர்நாடகா காங்கிரஸ் பாஸ்! தமிழ்நாட்டு திமுக ஃபெயில்!

கர்நாடகாவுல தேர்தல் நடந்தப்ப, காங்கிரஸ் சார்பா, குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 2,000 ரூபாய், வேலையில்லாத பட்டதாரிகளுக்கு மாதம் 3,000, 200 யூனிட் மின்சாரம் இலவசம் உள்பட 5 முக்கிய வாக்குறுதி கொடுக்கப்பட்டுச்சு.

இந்த வாக்குறுதிகளால, காங்கிரஸ் 135 தொகுதிகள பிடிச்சி ஜெயிச்சு ஆட்சிக்கு வந்துச்சு.

சமீபத்துல, நடந்த அமைச்சரவை கூட்டத்துக்குப் பின்னாடி தேர்தல்ல அறிவிச்ச 5 முக்கிய அறிவிப்புகள செயல்படுத்த உள்ளதா முதலமைச்சர் சித்தராமையாவும் துணை முதலமைச்சர் சிவக்குமாரும் கூட்டா அறிவிச்சிருக்காங்க.

அவங்க அறிவிப்பு படி, பெண்களுக்கு இலவச பேருந்து பயணம். ஜூலை 1-ஆம் தேதியில இருந்து கர்நாடகாவுல மாதந்தோறும் வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரமும், ஆகஸ்ட் 15 லேருந்து குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் 2,ஆயிரம் ரூபாய் வழங்கப் போறாங்க. இந்த ஆண்டு தேர்ச்சி பெற்ற பட்டதாரிகளுக்கு மாதம் 3ஆயிரம் வீதம் 2 வருஷம் வழங்கப்படுது. அதே மாதிரி வேலையில்லாத டிப்ளமோதாரர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு அல்லது வேலை கிடைக்கும் வரை மாசம் 1500 ரூபாய் வழங்கப்போறாங்க!

இப்படி சொன்னபடி, காங்கிரஸ் தனது தேர்தல் வாக்குறுதிகள நிறைவேத்தியிருக்கிற நிலையில, அதன் கூட்டணி கட்சியான, தமிழகத்தின் ஆளும் கட்சி திமுகவும் தன்னோட தேர்தல் வாக்குறுதிய செய்யுமான்னு கேள்வி எழுந்துருக்கு.

மகளிருக்கு மாசம் 1000 ரூபாய் தாரோம்னு சொன்னது, 2 வருஷமாகியும் இன்னும் கைக்கு வந்த பாடில்ல. மாசத்துக்கு ஒருதடவ மின் அளவீடு செய்யப்படும்னு சொன்னதும் காத்துல எழுதுன கதையாத்தான் இருக்கு. பெட்ரோல் டீசல் விலை குறைப்பு, சிலிண்டர் மானியம், நகைக்கடன் தள்ளுபடின்னு தேர்தலப்ப சொன்ன வாக்குறுதிகள் அப்படியே கிடக்கு…

அட நேத்து ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் கட்சியே கர்நாடகவுல தேர்தல் வாக்குறுதிய நிறைவேத்திட்டாங்க ! ஆனா நம்ம “ பொம்மை “முதல்வர் ஸ்டாலினால இதையெல்லாம் செய்யவே முடியல!

கூட்டணியில இருக்கிற காங்கிரசால கர்நாடகத்துல செய்ய முடியுறத, நான் தான் பெரியண்ணன்னு சொல்ற திமுகவால தமிழகத்துல ஏன் செய்ய முடியல? கர்நாடகாவுல செஞ்சத தமிழகத்துலயும் செய்வோம்னு காங்கிரஸும் சொல்ல ஆரம்பிச்சி கூட்டணிய விட்டு வெளியேறி புதுசா ஒரு கூட்டணிய அமைச்சிட்டுன்னா, திமுகவோட நிலை என்னாகும்? இதுக்குப் பிறகும் தேர்தல் வாக்குறுதிய நிறைவேத்தாம திமுக போக்கு காட்டுனா, 2024 நாடாளுமன்ற தேர்தல்ல மக்களும் திமுகவுக்கு பைபை சொல்லிடுவாங்க.

 

Exit mobile version