கர்நாடக அரசியலில் நீடிக்கும் பரபரப்பான சூழலில் இன்று கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறுகிறது.
மதச்சார்பற்ற ஜனதா தளம் – காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொண்டனர். இந்நிலையில், மேலும் 3 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பாஜகவுக்கு ஆதரவு தெரிவிக்க உள்ளதாக வெளியான தகவலால் கர்நாடக அரசியலில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
பா.ஜ.க தரப்பில் 60 கோடி ரூபாய் மற்றும் அமைச்சர் பதவி தருவதாக பேரம் பேசியதாக முதலமைச்சர் குமாரசாமியிடம் மதசார்பற்ற ஜனதா தளம் எம்.எல்.ஏ ஒருவர் புகார் அளித்துள்ளார். இதனிடையே இன்று நடைபெறும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் அனைவரும் பங்கேற்க வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் 5 எம்.எல்.ஏக்கள் மும்பையில் ரகசியமான இடத்தில் பாஜகவினரால் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானதையடுத்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Discussion about this post