மீன் விற்பனையில் ஜி.எஸ்.டி வரி விதிப்பை நீக்கக்கோரி காரைக்கால் மீனவர்கள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மீன் விற்பனைக்கு மத்திய அரசால் 5 சதவீத வரி விதிக்கப்படுகிறது. இதனால் மீனவர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ள நிலையில் மீன் விற்பனைக்கு ஜி.எஸ்.டி. வரி விதிக்கும் மத்திய அரசை கண்டித்தும், மீன் விற்பனைக்கு விதிக்கப்படும் ஜி.எஸ்.டி வரியை நீக்கக் கோரியும், காரைக்கால் துறைமுக முகத்துவாரத்தை தூர் வாரக் கோரியும், மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகுகளும் மீன் பிடித் தொழிலுக்கு செல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
மீன்பிடி துறைமுகத்தின் முகத்துவாரத்தை தூர் வார 2 ஆண்டுகளுக்கு மேலாக கோரிக்கை விடுக்கப்பட்டும், புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுக்கவில்லையென மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.