காரைக்கால் அம்மையார் மாங்கனித் திருவிழாவின முக்கிய நிகழ்வான மாங்கனி இறைக்கும் நிகழ்ச்சி, வெகு எளிமையான முறையில் நடைபெற்றது.
63 நாயன்மார்களில் சிவபெருமானால் அம்மையே என்று அழைக்கப்பட்ட புனிதவதியார் காரைக்கால் அம்மையார் கோவில் மாங்கனி திருவிழாவை நடத்த, அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து, கடந்த 21ம் தேதி கணபதி வழிபாடுடன் பரமதத்த செட்டியார் மாப்பிள்ளை அழைப்பு நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து, 22ம் தேதி புனிதவதியாருக்கும் பரமதத்தருக்கும் திருக்கல்யாணம் வைபவம் நடைபெற்றது.
இதையடுத்து, விழாவின் முக்கிய நிகழ்வான மாங்கனி இறைக்கும் நிகழ்வு, கைலாசநாதர் கோயிலுக்குள் நடைபெற்றறது. பிட்சாடன மூர்த்தியாக எழுந்தருளிய சிவபெருமான், கோவில் வெளிப்பிரகாரத்தில் 4 புறமும் சுற்றி அழைத்து வரப்பட்டார். அப்போது கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டுள்ள உபயதாரர்கள், அறங்காவலர்கள் உள்ளிட்டோர் தங்களுக்கு உள்ளாகவே மாங்கனிகளை வீசியும், பிடித்தும், மாங்கனி இறைத்தல் நிகழ்ச்சியை நடத்தினர்.
Discussion about this post