இந்திய விடுதலைப் போராட்டத்தைப் பொறுத்தமட்டில் அதில், வ.உ.சிதம்பரனாரின் பங்கு என்பது மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்று. சுதேசி இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்தி, வணிகம் செய்ய வந்த ஆங்கிலேயர்களை வணிகம் மூலமே விரட்டி அடிக்க நினைத்தவர் கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார். அவர் பிறந்த இந்நாளில், அவரின் நினைவைப் போற்றும் வகையில் கழகப் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் தனது வாழ்த்துகளை டிவிட்டர் தளத்தில் பதிவு செய்தார். அதனை பின்வருமாறு காண்போம்.
ஆங்கிலேயர்களுக்கு எதிரான உள்நாட்டு கப்பல் நிறுவனத்தை தொடங்கி, தூத்துக்குடி நூற்பாலை வேலைநிறுத்தத்தை வெற்றிகரமாக நடத்தி, தேசத்தின் விடுதலைக்காக தன் சொத்துகள் அனைத்தையும் இழந்து, சிறைக்கொட்டடியில் சித்ரவதைகளை அனுபவித்து ஆங்கிலேயர்களுக்கு தன் இறுதி மூச்சு உள்ளவரை சிம்மசொப்பனமாக திகழ்ந்த ”கப்பலோட்டிய தமிழன்” போற்றுதலுக்குரிய வ.உ.சிதம்பரனாரின் 152 வது பிறந்தநாளில் அவர்தம் பெரும் புகழையும் தியாகத்தையும் போற்றி வணங்குகிறேன்.
ஆங்கிலேயர்களுக்கு எதிரான உள்நாட்டு கப்பல் நிறுவனத்தை தொடங்கி, தூத்துக்குடி நூற்பாலை வேலைநிறுத்தத்தை வெற்றிகரமாக நடத்தி, தேசத்தின் விடுதலைக்காக தன் சொத்துகள் அனைத்தையும் இழந்து, சிறைக்கொட்டடியில் சித்ரவதைகளை அனுபவித்து ஆங்கிலேயர்களுக்கு
தன் இறுதி மூச்சு உள்ளவரை சிம்மசொப்பனமாக… pic.twitter.com/KJsT5uMZAr— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) September 5, 2023