கன்னியாகுமரி சுற்றுலா தளங்கள் ரூ.100 கோடி செலவில் மேம்படுத்தப்படும் – சுற்றுலாத்துறை

கன்னியாகுமரி, மணப்பாடு, ராமேஸ்வரம் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களை மேம்படுத்தும் வகையில்100 கோடி ரூபாய் செலவில் வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளப்படும் என்று, மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் கே.ஜே அல்போன்ஸ் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரியில் உள்ள சுற்றுலா இடங்களை பகுதிகளை ஆய்வு செய்ய வருகை தந்த கே.ஜே. அல்போன்ஸ், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். சர்வதேச சுற்றுலா மையமான கன்னியாகுமரியில் 32 கோடி ரூபாய் செலவில் திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் பாறை பகுதிகளை இணைக்கும் பாலம் உட்பட பல மேம்பாட்டு திட்டப் பணிகள் துவங்க உள்ளதாக தெரிவித்தார்.

தமிழக அரசு அறிவித்த ரோப் கார் திட்டத்தில் மத்திய அரசின்  20 சதவீதம் பங்களிப்புடன் வேலைகள் நடைபெறும் எனவும் அவர் கூறினார். இந்த ஆய்வின் போது மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் , மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Exit mobile version