கன்னியாகுமரி மாவட்டம் மட்டும் தமிழகத்துல இருக்கா கேரளத்துல இருக்கானே இப்ப வரை சந்தேகமா இருக்கு. மாநில மேப்ல கடைக்கோடில இருக்கதாலயோ, என்னவோ விடியா ஆட்சில வளர்ச்சிப் பணிகளோ, நலத்திட்டப் பணிகளோ உடனே போய் சேருறது கிடையாது. அத்தனை துறைலயும் கன்னியாகுமரி மாவட்டம் பின்னடைவ சந்திச்சுட்டு தான் இருக்கு. சமீபத்துல கூட கன்னியாகுமரி ஆசாரிப்பள்ளத்துல இருக்க கவர்மெண்ட் ஆஸ்பத்திரில, காய்ச்சல் சிகிச்சைக்கு வந்த 3 குழந்தைக்கு நாய்கடி ஊசி போட்டு தேசிய லெவல்வ அசிங்கப்பட்டுச்சு விடியா அரசு.
இப்போ புதுசா நீச்சல்குள பஸ் விட்டிருக்காங்க கன்னியாகுமரில. மழைல நனையாம போயிரலாம்னு பஸ் ஏறுனவங்களுக்கு எல்லாம் ஒரே அதிர்ச்சி, பஸ்ஸுக்குள்ள கூரைய பிச்சுட்டு பொழிஞ்சிருக்கு மழை. பஸ்ஸுக்குள்ளயே பயணிங்க எல்லாம் தொப்பியும், குடையும் புடிச்சுட்டு போன காட்சி விடியா ஆட்சில மட்டும் தான் சாத்தியம். பல நூறு கோடி செலவு பண்ணி புது பஸ் வாங்கியிருக்கோம்னு ஊரெல்லாம் விளம்பரம் பண்ணியிருக்கு விடியா அரசு… புது பஸ்னா எப்படியிருக்கும்னு நாங்களும் பாத்துக்குறோம், கொஞ்சம் கன்னியாகுமரிக்கு அனுப்பி வைங்கனு நாங்க சொல்லல… ஊருக்குள்ள பேசிக்கிறாங்க…
Discussion about this post