தமிழ் என்ற மொழியை மூச்சாக கருதி வாழும் கவிஞர்களின் அடையாளத்தை மேலும் இவ்வுலகிற்கு எடுத்துகாட்ட விருதுகள் வழங்கப்படுகிறது. ஆண்டுதோறும் கவியரசர் கண்ணதாசன் பிறந்தநாளையொட்டி கலைத்துறையிலும், இலக்கியத் துறையிலும் சிறந்து விளங்குபவர்களுக்கு அவர்களை கவுரப்படுத்தும் விதமாக கோவை கண்ணதாசன் கழகம் இவ்விருதினை வழங்கி வருகிறது.
2019 ஆம் ஆண்டுக்கான கண்ணதாசன் விருதானது எழுத்தாளர் திரு.சாரு நிவேதிதா, பின்னணிப்பாடகர் திரு. ஜெயச்சந்திரன் ஆகியோருக்கு வழங்கப்பட உள்ளது.சாரு நிவேதிதா உலக இலக்கியங்களை தமிழில் அறிமுகம் செய்வது,புதிய இலக்கியங்களை படைப்பது என தமிழ் இலக்கிய வரலாற்றில் முக்கிய பங்கு வகித்து வருகிறார்.சினிமா துறை, இசைத்துறை என அனைத்திலும் சாரு நிவேதிதா தனது பங்கினை சிறப்பாக ஆற்றியுள்ளார்.
அடுத்து,பின்னணிப்பாடகர் திரு. ஜெயச்சந்திரன் 1967 ஆம் ஆண்டு ‘மஞ்ஞலயில் முங்ஙி தோர்த்தி’ என்ற பாடல் வழியாக அறிமுகமானார்.தற்போது ஜெயச்சந்திரன் குரலானது அனைவராலும் ரசிக்கக்கூடிய குரலில் முதன்மையானதாக விளங்குகிறது.அவர் தனது இசை பயணத்தில் அரை சதம் கடந்துள்ளார்.இவரின் குரலில் இருக்கும் மந்திரத்தை கேட்டு மயங்காதவர் எவரேனும் உண்டோ?என்று கேட்டால், இல்லை என்பதே அனைவரின் பதிலாக இருக்கும்.
மேலும்,கண்ணதாசன் விருது வழங்கும் விழா கோவையில் 16.09.2019 அன்று நிகழ்கிறது.விருது பெரும் இரு இலக்கிய ஆசான்களுக்கும் தலா ரூ.1 லட்சமும்,பட்டயமும் சமர்பிக்கப்பட உள்ளது.