காமராசரின் தனித்துவம்:
அன்றைய காலக்கட்டங்களில் ஆட்சி முறை என்றதுமே அனைவருக்கும் நினைவில் வருவது என்னமோ புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். என்ற மூன்றழுத்து மனிதர் தான். அடுத்து யார் என்று கேட்டதுமே கொஞ்சம் கூட யோசிக்காமல் நாம் சொல்லும் பெயர் தான் ஏழை மக்களின் உன்னத குரல் கர்மவீரர் காமராசர். ஏனென்றால் “ஈராயிரம், மூவாயிரம் ஆண்டுகளாக சேர, சோழ, பாண்டியர்களின் ஆட்சிக் காலத்தில் நிகழாத அற்புதங்களெல்லாம் காமராஜர் ஆட்சியில் நிகழ்கின்றன” என்று காமராஜர் ஆட்சியை தந்தை பெரியாரே பாராட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கான காரணம் என்னவென்றால் ஏழை எளிய மக்களின் நலனை மட்டுமே நோக்கமாகா கொண்ட இவரின் ஆட்சி முறைத் தான். இவர் சென்னை மாகாண முதலமைச்சராக 1954இல் தெர்வுசெய்யப்பட்டார். அப்பொது 17 பேர் கொண்ட அமைச்சரவை எண்ணிக்கையை 8 ஆகக் குறைத்து, 17 பேர்கொண்ட அமைச்சரவை எண்ணிக்கையை 8 ஆகக் குறைத்து, கொண்டு திறமை உள்ளவர்களை மட்டுமே பணியமற்தினார். தன்னுடன் போட்டியிட்ட சி.சுப்ரமணியத்தையும் தன்னுடைய அமைச்சர் அவையில் இணைத்துக் கொண்டார். இவர் மேலும் சமூகநீதி அடிப்படையில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த பி.பரமேஸ்வரனை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சராக நியமித்தார் இது அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய காமராசர் அமைச்சரவை இருந்தது என்று கூட சொல்லலாம்.
எண்ணற்றத் திட்டங்கள்:
இந்த மாற்றம் காமராசர் அமைச்சரவையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியது. காமராஜர் ஆட்சியில் எண்ணற்ற நீர்ப்பாசனத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. இத்திட்டத்தின் மூலம் 25 லட்சம் ஏக்கர் புஞ்சை நிலங்கள் நீர்ப்பாசனம் பெற்று விவசாய நிலங்களாக மாறின. இதனை தொடர்ந்து நீண்ட காலமாக நடைமுறையில் இருந்த இடஒதுக்கீட்டுக் கொள்கை குறித்து சென்னை உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் இடஒதுக்கீடு ஆணையை ரத்துசெய்திருந்தன. இப்பிரச்சினையின் தீவிரத்தைப் பிரதமர் நேருவிடம் வலியுறுத்தி, அரசமைப்புச் சட்டத்தில் முதல் திருத்தம் கொண்டுவருவதற்குக் காரணமாக இருந்த காமராஜர் ‘முதல் திருத்தத்தின் மூலவர்’ என்றும் அழைக்கப்பட்டார். ஏழை எளிய மக்களின் குடியிருப்புகள், கிராமப் புற சாலைகள், கல்விகூடங்கள், முதல் முறயாக ஏழைக் குழந்தைகள் பள்ளிகூடங்களில் மதிய உணவு திட்டம் என அவரது ஆட்சிக் காலத்தில் பல திட்டங்களை நடைமுறைப்படுத்தினார். அவரது நோக்கமும், அணுகுமுறையும், வளர்ச்சியும் மக்களின் நலனுக்காக மட்டுமே இருந்தது என்றும் சொல்லலாம். இப்படியாக இவரது பெருமைகள் இருக்க மேலும் பெருமை சேர்க்கும் விதமாக தமிழக அரசு காமராசர் பிறந்த நாளான ஜுலை 15-ம் தேதி கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்தது.
ஜூலை ’15’ கல்வி வளர்ச்சி நாள்:
பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைக் கடிதத்தின் படி காமராசர் பிறந்த நாளான ஜூலைத் திங்கள் 15 ஆம் நாளை கல்வி வளர்ச்சி நாள் என அரசு அறிவித்தது , அந்நாளில் பள்ளிகளில் காமராஜர் திருவுருவப் படத்தினை அலங்கரித்து கொண்டாட ஏற்பாடுகள் செய்ய தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே 15.07.2023 ( சனிக்கிழமை ) அன்று அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகள் / நடுநிலைப் பள்ளிகள்/ உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கும் வேலை நாளாக அறிவித்தது. அந்நாளில் காமராசர் அவர்களின் அரும்பணிகள் குறித்து மாணவர்கள் உணர்ந்திடும் வகையில் பேச்சுப்போட்டி , ஓவியப்போட்டி , கட்டுரைப் போட்டி , கவிதைப் போட்டி போன்றவற்றை திட்டமிட்டு பள்ளி ஆசிரியர்களின் மேற்பார்வையில் நடத்திடவும் , பரிசுகள் வழங்கி ஊக்குவித்திடவும் அனைத்து தலைமையாசிரியர்களுக்கும் தெரிவிக்கப்பட்டது.
Discussion about this post