கமல்ஹாசன் சினிமாவில்தான் முதல்வராக முடியும் என்றும், மக்கள் அவரைத் தலைவராகப் பார்க்கவில்லை என்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
மதுரை பென்னர் நகரில் புதிதாக அமைக்கப்பட உள்ள தார்ச்சாலை பூமி பூஜையில் தமிழகக் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு கலந்து கொண்டு பணியைத் தொடக்கி வைத்தார். மதுரை காளவாசல் பகுதியில் வீடுகளுக்கே சென்று குப்பை சேகரிக்கும் 99 வாகனங்களையும் தொடங்கி வைத்தார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கமல்ஹாசன் சினிமாவில் தான் முதல்வராக முடியும் என்றும், தேர்தல்களின் முடிவுகள், மக்கள் அவரை தலைவராகப் பார்க்கவில்லை என்பதையே காட்டுவதாகவும் தெரிவித்தார்.
Discussion about this post