வாராரு வாராரு அழகர் வாராரு! பளபளக்கும் மதுரை! வைகையில் மக்கள் வெள்ளம்!

அழகர் ஆற்றில் இறங்கும் விழாவானது மதுரையில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

வைகையாற்றில் எழுந்தருளிய கள்ளழகர்:

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளும் வைபவத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் மத்தியில் விண் அதிர கோவிந்தா பக்தி கோஷம் முழங்க பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் கம்பீரமாக எழந்தருளினார் கள்ளழகர். சர்க்கரை தீபம் ஏந்தி கள்ளழகரை தரிசித்த பக்தர்கள் ஆற்றங்கரையோரம் முடி காணிக்கை செலுத்தி தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றினர்.

YouTube video player

Exit mobile version