கள்ளக்குறிச்சி மாவட்டத்துல நடந்த பல்வேறு நிகழ்ச்சிகள்ல பங்கேற்கிறதுக்காக, வாரிசு அமைச்சர் வந்துருக்காரு. அவர் கலந்துக்கிற கூட்டத்துல எல்லாம் மக்கள் பெருந்திரளா கலந்துக்கிட்டாங்கன்னு கணக்கு காட்டுறதுக்காக, உபிஸ் எல்லாம் கூட்டத்துக்கு ஆள்பிடிக்குற வேலையில ஈடுபட்டிருக்காங்க. சரக்கு வாகனம், டெம்போன்னு வாகனங்கள வாடகைக்கு பிடிச்சவங்க, தலைக்கு இவ்வளவு தாரோம்னு ரேட் பேசி கூட்டம் சேத்துருக்காங்க… இளம்பெண்கள், வயதானவங்க மட்டுமில்லாம சிறுமிகளையும் விடாம தலைக்கு100 ரூபா கொடுத்து கூட்டத்துக்கு வண்டி ஏத்தி அனுப்பியிருக்காங்க.
என்னப்பா இது100 ரூபா தாறீங்க? தக்காளி கிலோ 160 ரூபாய்…. சின்ன வெங்காயம் கிலோ 180 ரூபாய்…இப்படி காய்கறி ஒவ்வொண்ணும் ஆனைவில, குதிர விலைக்கு விக்குது… இந்த 100 ரூபாலாம் கட்டுப்படியாகுமான்னு வயதான பெண்கள், கேள்வி கேக்க… திமுககாரங்க திருதிருன்னு முழிச்சிருக்காங்க…
இப்படியெல்லாம் தலைக்கு விலை வச்சித்தானே, திமுக கூட்டத்த சேர்க்க வேண்டியிருக்கு… நல்லது செஞ்சாதான் மக்கள் தானாவே உங்களப் பார்த்து வருவாங்களே… அதுக்குத்தானே வழியே இல்லன்னு தெரிஞ்சிடுச்சே…. இனிமேலாவது கட்டுப்படியாகுற ரேட்ட கொடுங்கப்பா… அவங்களுக்கு அந்த ஒருநாள் பொழப்பாவது நல்லபடியா போகட்டும்னு நாங்க சொல்லல…. ஊருக்குள்ள பேசிக்கிறாங்க.