மரக்காணம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்த மூவர் வீட்டிற்கும் ஆறுதல் செல்ல சென்ற அதிமுக எம்பி சிவி சண்முகம் செய்தியாளரை சந்தித்தார். அவர் பேசியதன் சுருக்கம் பின்வருமாறு உள்ளது.
திண்டிவனம் காவிரிப்பாக்கம் பகுதியில் 20வது வார்டு பெண் கவுன்சிலரின் கணவர் கிலோ கணக்கில் கஞ்சா வைத்திருக்கிறார் என்று கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டார். இருபது நாட்கள் முன்பு 5000 லிட்டர் சாராயத்தினை வீட்டில் வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டார். திண்டிவனம் பகுதியில் இருந்துதான் விழுப்புரம் மாவட்டம் முழுவதும் சாராயம் விநியோகிக்கப்படுவது திமுகவினரால் தான். இது காவல்துறைக்கும் நன்றாக தெரியும். ஆனால் காவல்துறை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. திண்டிவனத்திலிருந்து பாக்கெட் சாராயம் விழுப்புரம் முழுவதும் விநியோகிக்கப்படுகிறது. இந்தக் காவல்துறை கையாலாகாத துறையாக உள்ளது. அதனை வழிநடத்துபவர்கள் முறையாக வழிநடத்தவில்லை. மெலும் உளவுத்துறையும் சரியாக இல்லை. திமுக ஆட்சியில் தொடர்ந்து கள்ளச்சாராயம், கஞ்சா சாக்லேட் போன்ற குற்றங்கள் அதிகரித்துவிட்டது என்று எம்பி சிவி சண்முகம் குற்றம் சாட்டினார்.
அவர் பேசிய காணொளி இணைப்பில் உள்ளது சொடுக்கவும்!
Discussion about this post