“சொன்னதை செய்வோம், சொல்லாததையும் செய்வோம்” இந்த வசனத்தை எங்கோ கேட்டதுபோல உள்ளதா? ஆம் இது நம்ம அய்யா முதல்வர் ஸ்டாலின் அவர்களின் வீராவேசமான வசனம் தான். ஆனால் “எந்த பயனும் இல்ல”. 520க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளைத் தேர்தலுக்காக கொடுத்துவிட்டு அதில் இன்னும் பலவற்றை நிறைவேற்றாமல் இழுத்தடிக்கும் விடியா ஆட்சியை தமிழகத்தில் வழங்கி வருகிறார் ஸ்டாலின். அதிலும் முக்கியமாக பெண்கள் சம்பந்தப்பட்ட வாக்குறுதிகளில் அய்யா ஸ்டாலின் காட்டிய பாராபட்சம் இப்போது பட்டவர்த்தனமாக தெரிந்துவிட்டது.
பிரச்சாரத்தின் போது கூறியது..!
தேர்தல் பிரச்சாரத்தின்போது அனைத்து மகளிருக்கும் உரிமைத்தொகையாக மாதந்தோறும் ரூபாய் ஆயிரம் வழங்கப்படும் என்று சொல்லிய திமுக அதனைத் தேர்தல் அறிக்கையிலும் கூறியிருந்தது. அதற்கு பிறகு சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் அன்றைக்கு நிதியமைச்சராக இருந்த ஆடியோ லீக் பிடிஆர் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் பழனிவேல் தியாகராஜன் ”தகுதியான குடும்பத்தலைவிகளுக்கு” மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று தெரிவித்தார். சரி அப்படி என்றால் யார் யார் தகுதியுடைய குடும்பத் தலைவிகள் என்ற கேள்வி அன்றைக்கே எழுப்பப்பட்டது.
இப்போது மாறிய வாக்குறுதி…!
அன்றைக்கு மழுப்பிவிட்டு திடீரென்று இப்போது ஒரு பட்டியலை இந்த ஸ்டாலின் அரசு வெளியிட்டுள்ளது. மகளிர் உரிமைத் தொகையைப் பெறுவதற்கு சில அடிப்படைத் தகுதிகளாக ஆண்டு வருமானம் 2.5 லட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும், 5 ஏக்கருக்கும் மேல் நிலம் வைத்திருக்க கூடாது, ஆண்டுக்கு வீட்டு உபயோகத்திற்கு 3,600 யூனிட்டிற்கும் குறைவாக மின்சாரம் பயன்படுத்த வேண்டும் என பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. இது சாமானிய மக்களை வஞ்சிக்கும் நடவடிக்கையாக உள்ளது என்று பல தரப்பினர் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.
சமூக ‘அ’நீதி அரசு…!
பெண்களுக்கான சமூகநீதி என்று சொல்லிவிட்டு பெண்களையே வஞ்சிக்கும் செயலில் ஈடுபடும் விடியா திமுக அரசு, பெண்களுக்கான இலவசப் பேருந்து சேவையைத் தொடங்கிவிட்டு, ஓசி பஸ் என்று பெண்களைத் தரக்குறைவாக பேசுவதும், மேடையில் தன் சொந்தக்கட்சிக்காரப் பெண்ணையே நீ எஸ்சி தானம்மா என்று சாதிய ரீதியாக பேசுவதும் போன்ற அவச்செயலைத் தொடர்ந்து புரிகிறார்கள். கேட்டால் பெண்களுக்கான கட்சி, சமூகநீதியில் திளைத்து வாழ்ந்தக் கட்சி என்று நம்மிடமே புருடா விடுவதில் வல்லவர்களாக உள்ளார்கள். இப்படிப் பொய் பேசி ஆட்சியை தக்கவைத்துவிட்டு திராவிடியன் ஸ்டோக் என்று வேறு பெருமை அடித்துக்கொள்கிறார்கள். அதிமுகவின் ஒவ்வொரு கேள்விக் கணைகளையும், வலியுறுத்தல்களையும் சரியாக எதிர்கொள்ளத் தெரியாமல் ஸ்டம்பை மறைத்துக்கொண்டு ஸ்டோக் மட்டும் வைப்பதில்தான் இந்த திமுகவினர் வல்லவர்கள் என்று அரசியல் விமர்சகர்களே நகைக்கிறார்கள்.