சென்னையில் காலை உணவுத் திட்ட திடீர் ஆய்வு என்ற பெயரில் புகழ் வெளிச்சத்துக்கு ஸ்கெட்ச் போட்ட விடியா அமைச்சர் சேகர் பாபுவின் செயல் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. மேயர் ப்ரியா, செய்தியாளர்களிடத்தில் சிக்கி அமைச்சரின் திட்டத்தை சல்லி சல்லியாய் உடைத்தது எப்படி என்பது குறித்து பார்ப்போம்…
தெருவெங்கும் பேனர், கட்சிக் கொடி, சிகப்புக் கம்பள வரவேற்பு என விடியா திமுக அமைச்சர் சேகர் பாபு, மேயர் ப்ரியா உள்ளிட்டோர் திடீர் ஆய்வில் ஈடுபட்ட லட்சணத்தின் காட்சிகளே இவை…
தமிழக அரசு தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு கடந்த ஆகஸ்ட் 25-ம் தேதி முதல் காலை சிற்றுண்டி உணவுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி அன்றைய தினம் இத்திட்டத்தை மண்ணடியில் உள்ள உருது நடுநிலைப் பள்ளியில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். இருப்பினும் திட்டத்தை அமைச்சர் தொடங்கி வைத்தது குறித்த தகவல்கள் பெரும்பாலான ஊடகங்களில் வெளியாகவில்லை.
இதனால் அப்செட் ஆன அமைச்சர் தரப்பு, திட்டம் தொடங்கப்பட்ட மூன்றாவது நாளான ஆகஸ்ட் 28-ம் தேதி புகழ் வெளிச்சம் தேடி திடீர் ஆய்வின் பெயரில் கோதாவில் குதித்தது. அதன்படி மீண்டும் அதே உருது நடுநிலைப் பள்ளிக்கு அமைச்சர் சேகர்பாபு வருகை புரிந்தார். திடீர் ஆய்வு என கூறப்பட்ட நிலையில், அமைச்சரை வரவேற்கும் விதமாக தெருவெங்கிலும் கட்சிக் கொடிகளும், பள்ளி நுழைவாயிலில் இருந்து சிவப்பு கம்பள வரவேற்பும் என தடபுடலான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இதனையொட்டி மாணவர்களுக்கான காலை சிற்றுண்டி பிரத்யேக ஏற்பாடுகளுடன் கொண்டு வரப்பட்டது. அதன்படி காலை சிற்றுண்டி உணவுத் திட்ட பட்டியலில் இடம்பெறாத இனிப்புகளுடன் சேர்த்து மாணவர்களுக்கு காலை உணவு
பரிமாறப்பட்டது. அப்போது ஆய்வின் பெயரில் வருகை தந்த அமைச்சர் சேகர் பாபு, மேயர் ப்ரியா ஆகியோர் உணவை ருசித்து பார்த்து தரத்தை பரிசோதிக்காமல், குழந்தைகளுக்கு அருகில் அமர்ந்து போட்டோவுக்கு போஸ் கொடுப்பதிலேயே மும்முரமாக இருந்தனர்.
பின்னர் குழந்தைகளுடன் அமைச்சரும், மேயரும் பேசிக் கொண்டிருப்பது போன்ற சில வீடியோ காட்சிகளை பதிவு செய்த பின்னர் அங்கிருந்து புறப்பட்டனர். அதன் பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது, ஆய்வு செய்ய வருவதற்கு எதற்காக கட்சிக் கொடி, சிவப்பு கம்பள வரவேற்பு எனும் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் மேயர் ப்ரியா திணறினார்.
இதற்கு முண்டியடித்துக் கொண்டு பதிலளித்த அமைச்சர் சேகர் பாபு, சென்னை மாநகர
பள்ளிகளில் தொடங்கப்பட்டுள்ள திட்டத்திற்கு ஓர் இடத்தில் உணவு சமைத்து பிற இடங்களுக்கு கொண்டு செல்லப்படுவதாகவும், அதனால் ஓரிடத்தில் ஆய்வு செய்வது
போதுமானதாக இருக்கும் எனவும் மேயர் பிரியாவிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு சம்பந்தமே இல்லாமல் சப்பைக் கட்டு கட்டினார்.
நிகழ்ச்சி முடிந்து விடியா அமைச்சரும், மாநகர மேயரும் சென்ற பின்னர், காலை
சிற்றுண்டி உணவின் சுவை பிடிக்காமல் சிறுவர்கள் உணவுகளை குப்பைத்தொட்டியில்
வீசிச் சென்றனர். தரமற்ற வகையில் வழங்கப்பட்டதன் காரணமாக, மாணவர்களுக்காக தயார் செய்யாப்பட்டிருந்த பெரும்பாலான உணவு வீணானது
இந்த நிலையில் புகழ் வெளிச்சத்துக்காக முன்கூட்டியே அனைத்து ஏற்பாடுகளையும் தடபுடலாக செய்து விட்டு, திடீர் ஆய்வு என்ற பெயரில் விடியா அமைச்சரும், மேயரும் அரசு பணத்தை வீணடித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் மத்திய அரசின் கல்வி கொள்கைத் திட்டத்தை எதிர்ப்பதாக கூறிவிட்டு, அதில் உள்ள காலை உணவு திட்டத்தை மட்டும் தானே சுயமாக சிந்தித்து அறிவித்தது போல் விடியா அரசு நாடகமாடி வருவதாகவும் விமர்சித்துள்ளனர்.