தமிழக அரசின் புதிய தலைமை செயலாளராக கே.சண்முகம் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தின் தலைமை செயலாளராக உள்ள கிரிஜா வைத்தியநாதன் நாளையுடன் ஓய்வு பெறுகிறார். இதையடுத்து புதிய தலைமை செயலாளரை நியமித்தது தொடர்பாக தமிழக அரசு ஆலோசனை நடத்தியது. இந்தநிலையில், புதிய தலைமை செயலாளராக கே.சண்முகத்தை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இவர் தற்போது நிதித்துறை செயலாளராக உள்ளார். 1985 ஆம் ஆண்டு ஜூலை 7 ஆம் தேதி அரசு பணியில் சண்முகம் சேர்ந்தார். கடந்த 9 ஆண்டுகளாக தமிழக அரசின் நிதித்துறை செயலாளராக அவர் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post