அடுத்து பொன்மகளாக வலம் வரும் ஜோதிகா: ஃபஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது

நடிகை ஜோதிகா நடிக்கும் ’பொன்மகள் வந்தாள்’ திரைப்படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

நடிகை ஜோதிகா நடித்த ராட்சசி படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், ஜோதிகாவின் அடுத்த படமான ’பொன்மகள் வந்தாள்’ திரைப்படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இப்படத்தினை நடிகர் சூர்யா தயாரித்து வழங்க உள்ளார். கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் தரும் கதைகளை தேர்வு செய்வதில் நடிகை ஜோதிகா சிறந்து விளங்குகிறார்.36 வயதினிலே, மகளிர் மட்டும், நாச்சியார், ராட்சசி ஆகிய திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே பாராட்டுகளை பெற்றது. அந்த வரிசையில் தற்போது பொன்மகள் வந்தாள் திரைப்படமும் இணைந்துள்ளது.ஃபஸ்ட் லுக் போஸ்டரில் துப்பாக்கி இடம் பெற்றுள்ளதால் இத்திரைப்படம் கிரைம் ஸ்டோரியாக இருக்கலாம் என கூறப்படுகிறது.இப்படத்தினை ஜே.ஜே.பெட்ரிக் இயக்குகிறார்.இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு எதிர்ப்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.

 

Exit mobile version