இந்தியன்- 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

பொங்கலை பண்டிகையையொட்டி இயக்குநர் ஷங்கர், இந்தியன் – 2 படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார்.

பிரமாண்ட இயக்குநரான ஷங்கர், கமல்ஹாசனுடன் இரண்டாவது முறையாக இணையும் படம் இந்தியன் – 2. இந்நிலையில் இப்படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை, பொங்கலை ஒட்டி, இயக்குநர் ஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். இப்படத்தில் இசையமைப்பு பணியை அனிருத்தும், ஒளிப்பதிவை ரவி வர்மனும் செய்கின்றனர். மேலும் படத்தின் பாடல்களை தாமரையும், விவேக்கும் எழுத சண்டைக்காட்சிகளை பீட்டர் ஹெய்ன் வடிவமைக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பானது வரும் 18-ம் தேதி முதல் துவங்குவதாகவும், அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள் என்றும் இயக்குநர் ஷங்கர் தெரிவித்திருக்கிறார். இதனிடையே இப்படத்திற்கான லைகா நிறுவனம், மீண்டும் ஷங்கருடன் கைகோர்த்து தயாரிப்புப்பணிகளை மேற்கொள்ளயிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version