திருவண்ணாமலையில், நீண்ட காலமாக நிலுவையில் உள்ள 5 ஆயிரம் வழக்குகள் கண்டறியப்பட்டு தேசிய மக்கள் நீதி மன்றத்தின் மூலம் தீர்வு காணப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் நிலுவையில் உள்ள வழக்குகள் மற்றும் மோட்டார் வாகன வழக்குகள் உள்பட பல்வேறு வழக்குகள், லோக் அதாலத் எனப்படும் தேசிய மக்கள் நீதி மன்றத்தின் மூலம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. குறிப்பாக, மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகம் கட்ட நிலம் வழங்கியவர்களுக்கு, 10 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த 31 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, 60 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. மேலும், நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வழக்குகள், சாலை விபத்து, கடன் பிரச்சனை மற்றும் குடும்ப நல வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் சமரசம் ஏற்படுத்தி தீர்க்கப்பட்டது.