ரயில்களில் பயணச்சீட்டு இல்லாமல் பணித்தவர்களிடமிருந்து ஆயிரத்து 377 கோடி ரூபாய் அபராத தொகையாக வசூலிக்கப்பட்டுள்ளது.
ரயிகளில் பயணசீட்டு இல்லாமல் பயணம் செய்யும் பயனிகளிடம் இருந்து டிக்கெட் கட்டணத்துடன் குறைந்தபட்சம் 250 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டு வருகிறது. பயணச்சீட்டு பரிசோதனை தற்போது தீவிரப்படுத்த ரயில்வேதுறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி கடந்த 3 நிதியாண்டுகளில் அபராதமாக வசூலிக்கப்பட்ட தொகை 31 சதவீதம் அதிகரித்து ஆயிரத்து 377 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளதாக இந்திய ரயில்வே துறை அறிவித்துள்ளது. அதேபோல் நடப்பு நிதியாண்டில் பயணச்சீட்டு இன்றி பயணம் செய்ததாக இதுவரை 89 லட்சம் பயணிகள் பிடிப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post