தங்க நகைகளுக்கு 6 இலக்கம் கொண்ட ஹால்மார்க் அடையாள எண் கட்டாயம் என்ற புதிய விதிக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகத்தில் இன்று காலை 11:30 மணி வரை நகை கடைகள் அடைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய விதியின் படி, அனைத்து நகைகளுக்கும் 6 இலக்கம் கொண்ட ஹால்மார்க் அடையாள எண் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஹால் மார்க் முத்திரை வழங்கும் மையங்களில் போதிய வசதிகள் இல்லாததால், பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் வியாபாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர். ஏற்கனவே கொரோனா ஊரடங்கால் நகை தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ள வியாபாரிகள், புதிய விதிக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று காலை 9 மணி முதல் 11:30 மணி வரை தமிழகத்தில் அனைத்து நகைக் கடைகளும் திறக்கப்பட மாட்டாது என அறிவித்துள்ளனர்.
Discussion about this post