கடலூரில் ஆடம்பர வாழ்க்கை வாழ ஆசைப்பட்டு சிறிது சிறிதாக , 97 பவுன் தங்க நகைகளை திருடிய கடை ஊழியரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடலூர் மாவட்டம், திருப்பாப்புலியூர் சுப்பராய செட்டி தெருவில் உள்ளது பிரபல நகைக்கடை ,அதில் பணிபுரிந்து வரும் கலைச்செல்வம் என்ற ஊழியர் ஆடம்பர வாழ்கைக்கு ஆசைப்பட்டு நூதன முறையில் கடையிலிருந்து நகைகளை கொள்ளையடித்துள்ளார். தினமும் சிறுக சிறுக நகைகளை திருடிய அவர், அதை அடகு வைத்து ஆடம்பரமாக செலவு செய்துள்ளார், இந்நிலையில், கடையில் நகைகள் குறைந்து வருவதை கண்ட கடையின் உரிமையாளர் முரளி, திருப்பாப்புலியூர் காவல்நிலையத்தில் புகார் அளித்ததின். அடிப்படையில் கடையில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர், இதில், கலைச்செல்வம் சிறுக சிறுக நகைத் திருட்டில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர், அவரிடமிருந்து 97 பவுன் தங்க நகைகள் மற்றும், 2 இருசக்கர வாகனங்கள் ஒரு எல்.சி.டி டிவியை பறிமுதல் செய்தனர்.