தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படும் அம்மாவின் பிறந்தநாள் விழா

தமிழகம் முழுவதும் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 71-வது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

காஞ்சிபுரம் மேற்கு மாவட்டம், உத்திரமேரூர் ஒன்றிய அதிமுக சார்பில் வாலாஜாபாத் பா.கணேசன் தலைமையில் எம்.ஜி.ஆரின் திருஉருவச்சிலைக்கும், ஜெயலலிதாவின் திருஉருவப் படத்திற்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஏழை, எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

காஞ்சிபுரத்தின் பல்வேறு பகுதிகளில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 71-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு அதிமுகவினர் கோயில்களில் அபிஷேகம் செய்தும் நலத்திட்ட உதவிகளை வழங்கியும் பிறந்த நாளை கொண்டாடி வருகின்றனர்.

நெல்லை மாவட்டம் குற்றாலம் ஓம் பிரணவ ஆசிரமத்தில் வாழும் நூற்றுக்கும் மேற்பட்ட ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் பெரியவர்கள், ஊனமுற்றோர்களுக்கு அதிமுக சார்பாக உணவு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை குற்றாலம் முன்னாள் மாவட்ட செயலாளர் குமார் பாண்டியன் தொடங்கி வைத்தார். அங்குள்ள குழந்தைகள் ஒன்று திரண்டு சிறப்பு கூட்டு பிராத்தனை செய்தனர். இந்த நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Exit mobile version