டாக்டர் ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழகத்துக்கு முதல் துணைவேந்தராக எஸ். அன்பழகனை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
திருவள்ளூவர் பல்கலைக்கழகத்தை பிரித்து, விழுப்புரத்தை தலைமையிடமாக கொண்டு, டாக்டர் ஜெ. ஜெயலலிதா பல்லைக்கழகம் உருவாக்கப்படுவதற்கான சட்ட மசோதா கடந்த மாதம் 5ம் தேதி தாக்கல் செய்து நிறைவேற்றப்பட்டது.
ஜெயலலிதா பல்கலைக்கழகத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கடந்த மாதம் 27ம் தேதி அடிக்கல் நாட்டினார்.
இந்நிலையில், ஜெயலலிதா பல்கலைக்கழகத்துக்கு முதல் துணைவேந்தர் நியமனம் செய்யப்பட்டதற்கான அரசிதழை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வந்த எஸ்.அன்பழகனை புதிய துணைவேந்தராக தமிழக அரசு நியமனம் செய்துள்ளது.
ஜெயலலிதா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவியில் மூன்று ஆண்டுகள் இவர் பணியாற்றுவார் என்றும் அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post