மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா எந்தவித பாகுபாடின்றி அனைவரிடத்திலும் அன்புடன் பழக கூடியவர் என்பதை எடுத்துகாட்டும் விதமாக போயஸ்கார்டன் பகுதியில் தேநீர்கடை நடத்தி வரும் மணி, தன் பழைய நினைவுகளை பகிர்ந்து கொள்கிறார். இது குறித்து ஒரு சிறப்பு தொகுப்பை தற்போது காணலாம்…
போயஸ்கார்டன் என்றாலே நம் நினைவுக்கு வருவது மறைந்த முதல்வர் ஜெயலலிதா வசித்து வந்த போயஸ் கார்டன் இல்லம் தான். வேதா இல்லத்தின் அருகே 30 ஆண்டுகளாக தேநீர் விற்பனை செய்துவருகிறார் மணி… மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களின் போயஸ் இல்லத்தில் மிகவும் பரீட்சையமான மணிக்கு போயஸ் கார்டன் பகுதியில் டீ கடை வைத்துக் கொள்ள அனுமதி கொடுத்ததாக் கூறிகிறார் மணி…
சிலநாட்கள் கழித்து மாநகராட்சி அதிகாரிகள் இவரின் கடையை அகற்றி இருக்கிறார்கள்.. அது மறைந்த முதலமைச்சருக்கு தெரியவரவே அதிகாரிகளிடம் மணியின் வியாபாரத்திற்கு எந்த தொந்தரவும் தரக்கூடாது என அதிகாரிகளிடம் தெரிவித்தாராம்…
இப்படியே மணியின் வியாபாரம் சென்று கொண்டிருக்க மீண்டும் 2002-ல் மீண்டும் மறைந்த முதலமைச்சர் ஆட்சி அமைத்தவுடன், கோட்டைக்கு செல்லும் வழியில் மணியை பார்த்து காரின் அருகே அழைத்துள்ளார். மணி தேநீர் கடை என்னவாயிற்று என்று தனக்கே உரிய தாயுள்ளத்துடன் கேட்டுள்ளார். அதற்கு அவர் மாநகராட்சி அதிகாரிகள் அகற்றிவிட்டார்கள் என்று கூற பின்பு என்ன நடந்தது என்று தெரியுமா?
நான் வாழும் வாழ்வு அவர் தந்தது என்று கூறும் மணி தற்போது அம்மா இல்லாதது மிகவும் துயரத்தைத் தருகிறது” என்று வேதனையுடன் கூருகிறார்…
மண்ணுலகை ஆண்ட அரசியின் 71-வது பிறந்த நாளில் தேநீர்கடை மணி போல இன்னும் கோடிக்கணக்கான மக்களும் தொண்டர்களும் அவரை வாழ்த்தி வணங்கி கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதே உண்மை…