குழந்தைகளை ஏதோ பொருட்களைப் போல லேப்களில் உற்பத்தி செய்யப்படுவதை சில படங்களில் நாம் பார்த்திருப்போம். அது மிக விரைவில் நிஜமாகப் போகுகிறது. இது உங்களுக்கு ஆச்சர்யமாக இருக்கலாம், அதிர்ச்சியாக இருக்கலாம், இவையெல்லாம் சாத்தியமா எண்று கூட கேட்கலாம். ஆம், 2028ஆம் ஆண்டில் ஆய்வகத்தில் குழந்தைகளை உருவாக்கும் முயற்சியில் ஜப்பான் ஆய்வாளர்கள் இறங்கியுள்ளனர்.
ஆய்வகத்தில் எப்படி குழந்தையை உருவாக்குகிறார்கள்…
ஆண் எலிகளின் தோல் செல்களை ப்ளூரிபோடென்ட் ஸ்டெம் ((PLURIPOTENT)) செல்களாக மாற்றும் முறையை ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர். ஆய்வகத்தில் மனித செல்களில் இருந்து முட்டை மற்றும் விந்தணுக்களை உற்பத்தி செய்வது குறித்து பல்கலைக்கழக பேராசிரியர்கள் ஆய்வு செய்தனர்.
இதைக்கொண்டு பல்வேறு வகையான செல்கள் அல்லது திசுக்களை உருவாக்க முடியும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள். இந்த ஸ்டெம் செல்களை குறிப்பிட்ட கெமிக்கல் மூலம் பெண் உயிரணுக்களை அதாவது முட்டை செல்களை உருவாக்குகிறார்கள்.
ப்ளூரிபோடென்ட் ஸ்டெம் ((PLURIPOTENT)) செல்கள் வழியாக உருவான கருக்களை ஒரு பெண்ணின் கருப்பையில் செலுத்துவதன் மூலம் இந்த ஆய்வை மனிதர்களிடமும் செய்ய வாய்ப்பு இருக்கிறது.
அதாவது, 5, 6 ஆண்டுகளில் மனிதர்களில் முட்டை போன்ற உயிரணு உற்பத்தியைச் செய்ய முடியும் என்றும், இந்த செயற்கை இனப்பெருக்க முறையை க்ளினிக்குகளில் பயன்படுத்த 10-20 ஆண்டுகள் வரை தேவைப்படும் என்றும் கூறுகின்றனர்.
அதாவது 10 ஆண்டுகளில் சோதனை முயற்சியில் நம்மால் லேப்களில் மற்ற பொருட்களைப் போல குழந்தைகளையும் உற்பத்தி செய்ய முடியும். இது எந்தளவுக்குச் சாத்தியம், இப்படி உருவாகும் குழந்தைகளுக்கு எதாவது பாதிப்பு இருக்குமா, அவர்களின் ஆயுள் எப்படி இருக்கும் என்பது குறித்து தெரிந்துகொள்ள பல ஆண்டுகள் வரை காத்திருக்கவே வேண்டும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இன் விட்ரோ கேமடோஜெனிக்ஸ் முறை என்ன?…((IN VITRO COMEDOGENICS))
ஆய்வகத்தில் மனித விந்து மற்றும் முட்டைகளை வளர்ப்பதற்கு பயன்படுத்தப்படும் முறைதான் இன் விட்ரோ கேமடோஜெனிக்ஸ் என அழைக்கப்படுகிறது. இது ஒரு நபரின் இரத்தம் அல்லது தோலில் இருந்து பெறப்படும் செல்களைப் பயன்படுத்த உதவுகிறது.
செயற்கையாக உருவாக்கப்பட்ட இனப்பெருக்க செல்கள் பின்னர் பெண்களின் கருப்பையில் பொருத்தக்கூடிய கருக்களை உருவாக்கவும் பயன்படுத்தப்படுகிறது. கருக்களை உருவாக்குவது சவாலாக இருக்கும் நிலையில், இன் விட்ரோ கேமடோஜெனிக்ஸ் முறை எந்த வயதினரும் கருத்தரிக்கவும் உதவுகிறது.
Discussion about this post