கோவை செட்டிபாளையம் பகுதியில் ஜல்லிக்கட்டு விளையாட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
செட்டிபாளையம் பகுதியில் ஜல்லிக்கட்டு விளையாட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இதனை உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார். இந்த ஜல்லிக்கட்டு போட்டியில், 800க்கும் மேற்பட்ட காளைகள் மற்றும் 700க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர். இந்த ஜல்லிக்கட்டு போட்டியை காண மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் அங்கு குவிந்துள்ளனர். மேலும், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
Discussion about this post