அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே நடைபெற்ற ஜல்லிக் கட்டுப்போட்டியை ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.
சூசையப்பர் பட்டிணம் கிராமத்தில் ஆண்டு தோறும் ஜல்லிக் கட்டுப்போட்டி நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டும் ஜல்லிக் கட்டுப்போட்டி நடைபெற்றது. சூசையப்பர் ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு திருப்பலிக்கு பிறகு, வாடிவாசலில் இருந்து திறந்து விடப்பட்ட காளைகள் சீறி பாயந்தன. இந்த போட்டியில் 600 காளைகள் மற்றும் 200க்கும் மேற்பட்ட மாடு பிடி வீரர்கள் பங்கேற்றனர். வெற்றி பெற்ற மாடுகள் மற்றும் மாடுபடி வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த போட்டியை சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.
Discussion about this post