பொங்கல் திருநாளை முன்னிட்டு, மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில், ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது.
உழவர்களின் உற்ற தோழனான காளைகளை போற்றும் நிகழ்ச்சியான ஜல்லிக்கட்டுப் போட்டி, அவனியாபுரத்தில் இன்று காலை 8 மணிக்கு விறுவிறுப்புடன் தொடங்கியது. வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தொடங்கி வைத்த இந்த ஜல்லிக்கட்டு போட்டியில், 611 காளைகளை அடக்க, 610 காளையர்கள் களம் கண்டனர். ஜல்லிக்கட்டுக்காக கடந்த நான்கு, ஐந்து மாதங்களாகவே தயார் செய்யப்பட்ட காளைகள், வாடி வாசலில் இருந்து சீறிப்பாய்ந்து வந்தன. அவற்றில் பல்வேறு மாடுகளை மாடுபிடி வீரர்கள் உற்சாகத்தோடும், தீரத்தோடும் அடக்கினர். சில மாடுகள் வீரர்களுக்கு பிடி கொடுக்காமல் ஓடிச் சென்றதால், அவை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. களத்தில் நின்று ஆடிய காளைகளும் உண்டு.
Discussion about this post