மணப்பாறை அருகே தீராம்பட்டியில் ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே தீராம்பட்டியில் உள்ள புனித வனத்து அந்தோணியார் செபஸ்தியார் ஆலயத் திடலில் ஜல்லிக்கட்டு போட்டியை மணப்பாறை வட்டாட்சியர் சித்ரா கொடியசைத்து துவக்கி வைத்தார். முதலில் வாடிவாசலில் வழியாக கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. இதைத் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் இருந்த அழைத்து வரப்பட்ட காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன. சில காளைகள் அடக்க வந்த வீரர்களை அருகில் நெருங்க விடாமல் விரட்டி அடித்தன. ஜல்லிக்கட்டில் வெற்றி பெற்ற வீரர்களுக்கும், காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன. இந்த ஜல்லிக்கட்டில் 800 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர்.
Discussion about this post