முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்
எல்லோராலும் மிகுந்த பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட ஜல்லிக்கட்டு வழக்கில், இன்று தீர்ப்பு வந்துள்ளது. தமிழர்களின் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் மீட்டெடுக்கும் வகையில் மகத்தான் தீர்ப்பு தற்போது வந்துள்ளது. இந்த தீர்ப்புக் காரணமாக இருந்த, சட்டசபையில் அவரச சட்டத்தை கொண்டுவந்த பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்களுக்கு நன்றி. காங்கிரஸ் மத்தியில் இருக்கும்போது சிங்கம், புலி, கரடி, சிறுத்தையுடன் சேர்த்து காட்டுவிலங்குகள் பட்டியலில் காளைகளைக் கொண்டு வந்தனர். அதனால் தான் ஜல்லிக்கட்டு தடை செய்யப்பட்டிருந்தது. 2011 ல் காளைகளை காட்சிப்படுத்தும் பட்டியலில் காங்கிரஸ் கட்சி இணைத்தபோது அமைதிகாத்தது கூட்டணியில் இருந்தது திமுக தான்.
விதிமுறைகள் மாற்றப்படும் என்றால், சில வரையறைகள் மற்றும் நெறிமுறைகள் கொண்டுவந்து கடைபிடிக்கப்படும். இது ஆபத்தான விளையாட்டுதான். அதனால் எந்தவித அசம்பாவிதமும் நடக்காமல் இருக்க சில விதிமுறைகளை பின்பற்றிதான் ஆகவேண்டும்.