ஜல் ஜீவன் திட்டத்தில் முறைகேடு! ஆய்வு செய்யச் சென்ற முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பண்ணனைத் தடுத்த விடியா அரசின் போலிசார்!

13 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள ஜல் ஜீவன் மிஷன் குடிநீர் திட்டத்தில் ஆட்சியாளர்கள் திறந்து வைத்தனர்…. குடிநீர் சரியாக கிடைக்கவில்லை என்று மக்கள் தொடர் குற்றசாட்டுகளை முன்வைத்ததின் பேரில் சட்டமன்ற உறுப்பினர் கே.சி. கருப்பணன் ஆய்வு செய்ய சென்றார். ஆனால் போலீசார் அவரை தடுத்துள்ளனர்…. என்ன நடந்தது விரிவாக பார்க்கலாம்.

பவானி சட்டமன்ற உறுப்பினர், வளர்ச்சிப் பணிகள் ஆய்வு செய்ய சென்ற இடத்தில், போலீஸ் குவிப்பால் கவுந்தப்பாடியில் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு மாவட்டம் பவானி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொம்மன்பட்டியில் ஜல் ஜீவன் மிஷன் குடிநீர் திட்டத்தை நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் முத்துசாமி திறந்து வைத்தனர்… இந்த திட்டத்திற்காக அரசு 13 கோடி செலவிட்டதாகவும் அந்த நேரத்தில் கூறப்பட்டது.

கோடிகளில் செலவு செய்த போதும் விடியா திமுக அரசு, அந்த திட்டத்தை சரிவர நிறைவேற்றாமல், அறைகுறையாக தொடங்கிவைத்தது…. கவுந்தப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் குடிதண்ணீர் பற்றாக்குறை தலைவிரித்தாடிய நிலையில்தான் இந்த திட்டத்திற்கு கடந்த ஆட்சி காலத்தில் நிதி ஒதுக்கப்பட்டது…

திமுக அரசு பொறுப்பேற்ற பின் இந்த திட்டத்தை சரிவர கவனிக்கவில்லை. வேலை முடிவதற்கு முன்பாகவே திறப்புவிழா நடத்தியதால் அப்பகுதியில் உள்ள பல கிராமங்களுக்கு தண்ணீர் வரவில்லை.

துவக்க விழா நடந்து ஒரு வாரம் கூட ஆகவில்லை, குடி தண்ணீர் குழாய்கள் ஆங்காங்கே உடைந்து தண்ணீர் வீணாகிக் கொண்டிருக்கிறது.

குழாயில் உடைப்புகள் ஏற்பட்டுள்ளதால் மற்ற கிராமங்களுக்கு தண்ணீர் செல்லவில்லை என பரவலாக குற்றசாட்டு எழுந்தது…தாராளமாக நிதி ஒதுக்கப்பட்டும், ஒப்பந்ததாரர்களுக்கு உரிய நேரத்தில் பணம் கிடைக்காததால் மிச்சமிருக்கும் பணிகள் தாமதம் ஆகிறது. மேலும் பல நீரேற்ற நிலையங்களில் முழுமையாக தண்ணீர் நிரம்பவில்லை.

குற்றசாட்டுகள் எழுந்த நிலையில் அதிமுக எம்எல்ஏ கே.சி. கருப்பணன் திட்டத்தை ஆய்வு செய்ய சென்றார். ஆனால் இரவோடு இரவாக அங்கே போலீஸை குவித்த திமுக, அவரை உள்ளே செல்ல அனுமதிக்க மறுத்துள்ளது…. நான் பணி நடக்கும் இடத்தை ஆய்வு செய்ய வந்துள்ளேன் என்று கூறிய பின்னர் அனுமதி வழங்கியுள்ளனர்.

மாநிலத்தில் பல இடங்களில் போதைப்பொருள், கொள்ளை, கொலை என நடந்து கொண்டிருக்கையில் அதையெல்லாம் கண்டுகொள்ளாத திமுக அரசு, எம்எல்ஏ ஆய்வு சென்றால் இரவோடு இரவாக போலீசை குவிக்கிறது என அப்பகுதி பொது மக்கள் விமர்சனம் செய்துள்ளனர்.

Exit mobile version