திருச்சி சிறைவாசிகள் சாகுபடி செய்த கரும்புகள் பொங்கல் பரிசாக மக்களுக்கு கிடைக்க இருக்கின்றன.
திருச்சி மத்தியச் சிறையில் உள்ள தண்டனை சிறைவாசிகள் மனம் திருந்தி வாழ்வதற்காக, பேக்கரி, உணவகம் போன்ற சுயதொழில் வாய்ப்புகளை சிறைத்துறை நிர்வாகம் ஏற்படுத்தி வருகிறது. இதன் ஒருபகுதியாக விவசாயத்தில் ஆர்வமுள்ள சிறைவாசிகளைக் கொண்டு கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஒன்றே கால் ஏக்கரில் இயற்கையான முறையில் சாகுபடி செய்யப்பட்ட கரும்புகள் அறுவடை செய்யப்பட்டு வருகிறது. திருச்சி சரக சிறைத்துறை டிஐஜி சண்முகசுந்தரம், மத்தியச் சிறை கண்காணிப்பாளர் விஜயன் முன்னிலையில் சிறைவாசிகள் 40 ஆயிரம் பொங்கல் கரும்புகளை அறுவடை செய்தனர். சுமார் 3 லட்சம் மதிப்பிலான கரும்புகள், தமிழக அரசின் பொங்கல் பரிசு திட்டத்திற்காக அனுப்பி வைக்கப்பட உள்ளன.
Discussion about this post