சபரிமலை ஐயப்பன் கோயிலின் வருவாய் கடந்த 28 நாட்களில் 100 கோடியை தாண்டியது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல மற்றும், மகர விளக்கு பூஜைக்காக கடந்த மாதம் 16ம் தேதி நடை திறக்கப்பட்டது. அன்று முதல் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. லட்சக்கணக்கான பக்தர்கள், மாலை அணிந்து விரதம் இருந்து சபரிமலைக்கு செல்கின்றனர். இதனால் கோயில் வருமானமும் கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டில் இதே நாளில் ஐயப்பன் கோயில் வருவாய் 60 கோடியாக இருந்த நிலையில், இந்தாண்டு 28 நாட்களில் வருவாய் 100 கோடியை தாண்டியது. பக்தர்கள் செலுத்தும் காணிக்கை, அப்பம் மற்றும் அரவணை பிரசாதங்கள் மூலமாக இந்த வருவாய் கிடைத்துள்ளது. பக்தர்கள் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் கோயில் வருவாய் இன்னும் அதிகரிக்கும் என்று நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.