எதிர்க்கட்சித் தலைவர் மீது பொய் வழக்குப் பதிவு செய்திருக்கும் விடியா அரசின் காவல்துறையைக் கண்டித்து மதுரையில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் அவர்கள் எழுச்சியுரை ஆற்றினார். அவர் பேசியதன் சாராம்சம் பின்வருமாறு உள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் அண்ணன் எடப்பாடி பழனிசாமி அவர்கள் புரட்சித் தலைவி அவர்களின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்திற்காக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதனையொட்டி சிவகங்கைப் பொதுக்கூட்டத்திற்கு அனுமதியளிக்காமல் இருந்த அரசு பின் அனுமதி அளித்தது. அக்கூட்டத்தை முடித்துக்கொண்டு மதுரை வருகையில் ஒரு நபர் உள்நோக்கத்துடன் நமது முன்னாள் முதல்வர் அவர்களை வசைபாடுகிறான். அவன் வேண்டுமென்றே தனது செல்போனில் வீடியோ ஒன்றினையும் எடுக்கிறான். கண்ணியமிக்க தலைவரான நமது எதிர்க்கட்சித் தலைவர் அமைதியாக இருந்தார். மதுரை விமான நிலையத்தில் எதிர்க்கட்சித் தலைவரை வரவேற்கும்பொருட்டு வந்திருந்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ அவர்கள் மற்றும் தொண்டர்களிடன் நடந்த நிகழ்வை எதிர்க்கட்சித் தலைவரின் பிஏ எடுத்துக்கூற, காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் அதனை பெரிதாக கொள்ளாமல், குற்றாவாளி கொடுத்த பொய் வழக்கினை எதிர்க்கட்சித் தலைவர் மீது பதிவு செய்துள்ளது இந்த விடியா திமுகவின் காவல்துறை.
திருவாரூரில் இருந்து திருட்டு ரயிலில் ஏறி வந்த குடும்பத்தை சேர்ந்த ஸ்டாலின் அவர்களே, இன்றைக்கு நீங்கள் ஒரு சர்வாதிகாரியாக திகழ்கிறீர்கள். 520 வாக்குறுதிகளை கொடுத்த உங்களுக்கு அதனை நிறைவேற்ற துப்பு இல்லை. மேலும் அதிமுக ஆட்சியில் கொண்டுவந்த திட்டங்களை கிடப்பில் போட்ட பொம்மை முதலமைச்சராக உள்ளீர்கள். பொய் வழக்கு போட்டு எங்களுக்கு பூச்சாண்டி காட்ட முடியாது. இந்த ஆர்ப்பாட்டம் என்பது வெறும் டிரைலர் தான். உங்கள் பாசிச ஆட்சியை முறியடித்து எதிர்க்கட்சித் தலைவர் தலைமையில் அதிமுக வென்று மீண்டும் தமிழகத்தை ஆளும் என்று பேசி தன்னுடைய கண்டன உரையை முடித்தார் முன்னாள் அமைச்சர்.
Discussion about this post