மேலை நாடுகளில் காதல்!!
மேலை நாடுகளில் காதல் என்பது கொண்டாட்டத்திற்கு உரியது. அவர்கள் அதை உணர்ச்சிப்பூர்வமாக கொண்டாட்டதின் அடிப்படையில் வெளிப்படுத்துவார்கள். அந்த வகையில் ஐரோப்பியா, இத்தாலி, பிரான்ஸ் போன்ற நாடுகள் என்றதும் கொண்டாட்டங்கள் நிறைந்த நாடுகள் என்பதை அனைவரும் அறிவோம். அதுபோலவே எல்லா வகையான நிகழ்ச்சிகளும் அங்கு வெகுவிமர்சையாகத்தான் நடைபெறும். அந்த வகையில் இவர்கள் காதலுக்கு மரியாதை செய்யாமலா இருப்பார்கள், இவர்கள் செய்த மரியாதையை பார்த்தால் ஒரு காதலுக்காக இவ்வளவா? செய்வார்கள் என்று வாய்ப்பிளப்பார்கள் அண்டை நாட்டினர். நமக்கு தெரிந்த காதல் கதை என்றால் ஷாஜகான் மும்தாஜிற்கு தாஜ்மஹால் கட்டிக்கொடுத்த கதை தான். ஆனால் இங்கு ஒருவர் என்ன என்ன செய்திருக்கிறார் என்று உங்களுக்கு தெரியுமா? இந்த காதல் யாரையும் விட்டு வைப்பதில்லை என்று கூட சொல்லலாம். சிறியவர்கள் முதல் பிரதமர்கள் வரை இந்த காதல் செய்யும் வேலைகள் இருக்கே அப்பப்பா இவங்க பண்ற அலப்பறை தாங்க முடியலயே தல வலிக்கிதுடா தல வலிக்குதே என்ற வசனம் தான் நியாபகம் வருகிறது.
காதலும் கடந்து போகும்:
இத்தாலி நாட்டின் முன்னால் பிரதமரான சில்வியோ பெர்லுஸ்கோனி தனது காதலியான மார்டனா பேசினா என்பவருக்கு தனது 900 கோடி சொத்தை கொடுத்து உள்ளார். உடல் நாலக் குறைவால் கடந்த ஜூன் மாதம் காலமான இத்தாலி நாட்டின் முன்னால் பிரதமரான சில்வியோ பெர்லுஸ் கோனி தனது காதலிக்கு தனது சொத்தை உயில் எழுதி வைத்துள்ள தகவல் தற்போது வெளியாகி உள்ளது. ஐரோப்பிய நாடான இத்தாலின் பிரதமராக மூன்று முறை பதவி வகித்து வந்தார் சில்வியோ பெர்லுஸ்கோனி. இவர் ’போர்ஸா இத்தாலியா’ என்னும் கட்சியை சேர்ந்தவர் ஆவார். இவர் கடந்த ஜூன் மாதம் 12-ஆம் தேதி அன்று உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இவரின் சொத்து மதிப்பானதி ஆறு பில்லியன் யூரோ அதாவது இந்திய மதிப்பில் சொல்லப் போனால் 5.40 லட்சம் கோடி ரூபைக்கு மேல் இவரது சொத்து மதிப்பு உள்ளது.
இவருக்கு இரண்டு முறை திருமணம் ஆகியும் விவாகரத்து பெற்ற நிலையில் தனது கட்சியை சேர்ந்த மார்டனா பேசினா என்பவருடன் 2020-ல் மார்ச் மாதம் முதல் நெருங்கி பழகி வந்து உள்ளார். மார்டனாவின் வயது 33 என்பது குறிப்பிடத்தக்கது. சில்வியோ இவரை திருமணம் செய்யவில்லை என்றாலும் பல இடங்களில் தனது மனைவி என்றே அறிமுகப்படுத்தினார். இன்னிலையில் தனது காதலியான மர்டினாவிற்கு தனது 900 கோடி மதிபுள்ள சொத்தை உயில் எழுதி வைத்துள்ளார். அவர் எழுதிய உயிலானது அவரது ஐந்து குழந்தைகள் மற்றும் உறவினர்கலிம் முன்னிலையில் வாசிக்கப்பட்டது. அதில், தனக்கு சொந்தம்மான அனைத்து சொத்துகளையும் தனது காதலியான மார்டனா பேசினாவிற்கு சுயவிருப்பதின் படி அளிக்கிறேன் என்றும், எனக்கு சொந்தமான அனைத்து நிறுவனக்களின் பொறுப்புகளையும் தனது இரண்டு மகள்களுக்கும் ஒப்படைக்கிறேன் என்றும் மீதமுள்ள அனைத்து சொத்துகளையும் எனது ஐந்து குழந்தைகளுக்கும் சமமாக பங்கிட்டு கொடுக்கிறேன் என்றும் அந்த உயிலில் கூறியிருந்தார். இதனை கேட்டு அன்னாட்டு மக்கள் நமக்கு இப்படி ஒரு காதல் இல்லையே என்று ஏங்குகின்றனர்.
Discussion about this post