ஆண்டிபட்டியில் அமமுக அலுவலகத்தில் ஒரு கோடியே 48 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது குறித்து வருமான வரித்துறை விளக்கம் அளித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ஆண்டிபட்டியில் உள்ள அமமுக அலுவலகத்தில் நள்ளிரவு முழுவதும் தொடர்ந்த சோதனை அதிகாலை ஐந்தரை மணிக்கு நிறைவடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்போது கட்டுக்கட்டாக 94 கவர்களில் ஒரு கோடியே 48 லட்சம் ரூபாய் ரொக்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், அந்த கவர்களில் வார்டு எண், பணப்பட்டுவாடா செய்யும் நபரின் விபரம், வாக்காளர்கள் எண்ணிக்கை உள்ளிட்ட தகவல்களும் இடம் பெற்று இருந்தன.
இந்தநிலையில் ஆண்டிப்பட்டி அமமுக அலுவலகத்திற்கு 2 கோடி ரூபாய் ரொக்கம் கொண்டு வரப்பட்டதாகவும், அதில் ஒரு கோடியே 48 லட்சம் ரூபாய் சிக்கியிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆண்டிப்பட்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் டிடிவி.தினகரனின் ஆதரவுபெற்ற வேட்பாளர் ஜெயக்குமாரின் சின்னத்தை குறியீடு செய்த தபால் ஓட்டுக்களும் சிக்கியிருப்பதால் அவர் தகுதி நீக்கம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.