அனைத்து குடிமகன்களும் தாய் மொழியை ஊக்குவிப்பதுடன், பிற மொழிகளையும் கற்றுக் கொள்ள வேண்டும் என குடியரசுத் துணைத்தலைவர் வெங்கையா நாயுடு வலியுறுத்தியுள்ளார்.
சர்வதேச தாய் மொழி தினத்தையொட்டி டெல்லியில் நடைபெற்ற விழாவில் சிறப்பு விருந்தினராக குடியரசுத் துணைத்தலைவர் வெங்கையா நாயுடு கலந்து கொண்டார். விழாவில் பேசிய அவர், தாய் மொழியை நாம் பாதுகாத்து ஊக்குவிக்கும் போது, மொழியியல் மற்றும் கலாச்சார பன்முகத்தையையும் பாதுகாக்கிறோம் என கூறினார்.
உச்சநீதிமன்ற தீர்ப்பு ஆறு மொழிகளில் வெளியாகும் என்ற அறிவிப்பை சுட்டிக்காட்டிய அவர், அதை வரவேற்பதாக கூறினார். அரசு வேலை நியமனங்களில் இந்திய மொழி குறித்த பொது அறிவு கேள்விகள் கட்டாயமாக்கப்பட வேண்டும் எனவும் வெங்கையா நாயுடு குறிப்பிட்டார். விழாவின் ஒருபகுதியாக, குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு 22 மொழிகளில் பேசி அசத்தினார்.