தமிழகத்தின் வனப்பகுதி வழியே மாவோயிஸ்டுகள் நுழைவதை தடுக்க தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டத்தில் வனப்பகுதியை ஒட்டியுள்ள மலைக் கிராமங்களில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு, காவல்துறை சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதில் பங்கேற்ற மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாண்டியராஜன், மாவோயிஸ்டுகளின் நடமாட்டத்தை கண்டறிய மலைக்கிராம மக்களின் ஒத்துழைப்பு அவசியம் என தெரிவித்தார்.
தமிழகத்தில் மாவோயிஸ்டுக்கள் நுழைவதைத் தடுக்க தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
Discussion about this post