16 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

தமிழகம் முழுவதும் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. சென்னையில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 38 லட்சத்து 18 ஆயிரமாக உள்ளது.

சென்னை மாவட்டத்தில் 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் வெளியிட்டார். அதன்படி, ஆண் வாக்காளர்கள் எண்ணிக்கை 18 லட்சத்து 83 ஆயிரத்து 989 ஆக உள்ளது. பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை 19 லட்சத்து 34 ஆயிரத்து 78 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர் 932 என மொத்த வாக்காளர்கள் 38லட்சத்து 18 ஆயிரத்து 999 பேர் உள்ளதாக ஆணையர் கார்த்திகேயன் தெரிவித்தார்.

Exit mobile version