12 ஆண்டு கால ஆட்சி முடிவுக்கு வந்தது!!

இஸ்ரேலில் பெஞ்சமின் நெதன்யாகுவின் 12 ஆண்டு கால ஆட்சி முடிவுக்கு வந்ததை அடுத்து புதிய பிரதமராக நப்தாலி பென்னட் பதவியேற்றார். கடந்த மார்ச் 23 ம் தேதி நடந்த தேர்தலில், மொத்தம் 120 இடங்களில் பெஞ்சமின் கட்சி 30 இடங்களைப் பிடித்தது. தனிப்பெரும் கட்சியாக உருவான போதும், அவரால் கூட்டணி அரசு அமைக்க முடியவில்லை. இதனால், இழுபறி நிலை நீடித்ததை அடுத்தது, 8 எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து யமினா கட்சியின் தலைவர் நப்தாலி-பென்னட் ஆட்சி அமைத்தார். சுழற்சி முறையில் பிரதமர் பதவியை கூட்டணி கட்சியினருக்கு தரவும் ஒப்புதல் தரப்பட்டது. முதலில், நப்தாலி-பென்னட் அமைச்சரவையில் 9 பெண் அமைச்சர்கள் உட்பட 27 பேர் இடம்பிடித்தனர்.

 

Exit mobile version